ADIRAMPATTINAM KHADIR MOHIDEEN BOYS HR.SEC.SCHOOL OLD STUDENTS ASSOCIATION

 

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - அதிராம்பட்டினம்

முன்னாள் மாணவர்கள் சங்கம்

அன்புடையீர்,

                       அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் நம் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரா? உடன் நமது முன்னாள் மாணவர்கள் சங்கதில் உறுப்பினராகுங்கள். நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் பள்ளியான காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைத் தொடர்பு கொண்டு உறுப்பினராகுங்கள். நம்பள்ளி சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 85% சதவீத தேர்ச்சியும் பன்னிரெண்டாம் அரசுப் பொதுத்தேர்வில் 92% சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

                             எல்லா திறனும் உள்ள நமது மாணவர்களைச் சிறந்த சாதனையாளராக உருவாக்க உங்களின் ஒத்துழைப்பு தேவை என்பதால் முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியும் பள்ளியின் நலன் கருதியும் இந்த முன்னாள் மாணவர்கள் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. உடன் நம் பள்ளியைத் தொடர்பு கொண்டோ அல்லது உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிமையான நினைவுகளைத் தூண்டிய உங்கள் ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டோ இச்சங்கத்தில் இணையுங்கள். உங்களுக்கென்று விரைவில் ஒரு விழா தொடங்கவிருக்கிறது. பழமையின் நினைவுகளும் இளமையின் கனவுகளும் சுமந்துள்ள நீங்கள் உங்களின் நண்பர்களைச் சந்திக்க இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

                                                         திருமதி பி. ரோசம்மாள்,
                                                                         தலைமையாசிரியர் & தலைவர்
                                                                                     செல் : 9442267365

ஜனாப். எம். ஹாஜி முகமது                                                                  ஜனாப். ஏ. மகபூப் அலி
துணைத் தலைவர்                                                                                                                  செயலாளர்
                                                                                                                                                          செல் : 9442767380

டாக்டர் ஆ. அஜ்முதீன்                                                                      திரு. ஏ. சீனிவாசன்                                                                      
துணைச் செயலாளர்                                                                                             பொருளாளர்
செல் : 9894666791                                                                                          செல் : 9443863697

                                      email : kmboysoldstudentsassociation@gmail.com